Sundara Rajan
சுந்தர ராஜன்
நான் பிறந்த ஊர் ஆரணி என்கிற ஒரு சிறிய நகரத்தில். பள்ளிப் படிப்பை முடித்த கையோடு, குடும்ப ஜவுளி வியாபரத் தொழிலில் தந்தைக்கு துணையாக இணைந்தேன். 16 வயதில் தொடங்கியதை இன்றும் தொடர்கிறேன். தொலைதூரத் தொடர் கல்வி மூலம் B.Com. முடித்தேன்.

பத்து வயது முதல், வீட்டில் இருந்த Agfa Click II என்கிற 120 காமிரா மூலம் புகைப்படம் எடுக்கும் ஆர்வம் தொடங்கியது. பின்னர் 15 வயதில் Nikon FM 35mm காமிராவில் புகைப்படம் எடுக்கும் ஆர்வம் பலமடங்காகியது. ரேடியோ மட்டுமே தகவல் தொடர்பு சாதனம். தொலைக்காட்சி கூட இல்லாத கால கட்டத்தில் புகைப்படக் கலையை நீண்ட காலங்களுக்கு மிக மெதுவாகவே கற்றுக்கொள்ள முடிந்தது.

பிலிம் காலம் டிஜிட்டலை நோக்கி நகர்ந்த பின்னர் என்னுடைய கற்றல் வேகம் அதிகரித்து, தொடர்பு சாதனங்களின் அதீத வளர்ச்சியின் துணையால் நிறைய கற்றுக்கொள்ளும் வசதி கிடைத்தது. பல நல்ல நண்பர்கள்  வழிகாட்டலோடும் வேகமாகக் கற்றுக்கொள்ள முடிகிறது.

இப்பொழுது வசிக்கும் வேலூர் என்கிற மாவட்டத் தலைநகரில் பறவைகளை நிறைய காணவும் ரசிக்கவும் முடிகிறது. இந்த ஊரில் இத்தனை வகைப் பறவைகளா என்று வியக்கும் அளவிற்கு அற்புதமான பறவைகள் நிறைந்த ஊர் வேலூர். அருமையான நண்பர்கள் பலர் என்னைப் போல Bird Watching செய்கிறார்கள். அவர்களோடு நான் முயன்று எடுக்கும் புகைப்படங்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தோடு இந்த சிறிய Profile Page ஒன்றை துவங்கி இருக்கிறேன். தங்களின் மேலான கருத்துக்களை தெரிந்துகொள்ளவும் விரும்புகிறேன்.